வியாழன், 4 டிசம்பர், 2008

"நீ...."


எந்த பெண்ணும்
தன் மனதுக்கு
பிடித்தவனை
அணு,அணுவாக
ரசிப்பாள்...!!
நானும் அப்படித்தான்...



உன் நடை!
நாகரிகப் பார்வை!
உன் உதட்டளவில்
வந்து போகும்
பேச்சின் பரிதவிப்பு..!
அனைத்துமே...
என் கண் முன்
காட்சியாகின்றன..!!

எனக்கு
பொய் பேச
தெரியது..!!
உன்னிடத்தில் மட்டும்....

எங்கே..?
உன்னை விரும்புவதை
வெளிக்காட்டி விடுவேனோ!!
என்று பலமுறை
உன்னிடம்...
நட்புடன் பேசுவது போல்
"பகல் வேஷம்"
போட்டதுண்டு...!!!

அனால்..!
அதை எண்ணி
எத்தனை முறை
எனக்குள்ளாகவே
அழுது இருகின்றேன்..!
தெரியுமா??
_____நிலாபாவை...

3 கருத்துகள்:

சிவாஜி சொன்னது…

// எனக்கு
பொய் பேச
தெரியது..!!
உன்னிடத்தில் மட்டும்.... //

NICE LINES...

இராவணன் சொன்னது…

ஆழ்மனதின் வலிமிகுந்த பதிவு.

Unknown சொன்னது…

hey really nice lines pa... I have experienced each and every line given here :)