வியாழன், 4 டிசம்பர், 2008

என்னவனே... !!


என்னவனே ....!
என் வார்த்தைகள்
வேண்டுமானால்
கவித்துவம்
இல்லாமல் இருக்கலாம் ....!
ஆனால் ...
நான் உன் மீது
வைத்திருக்கும் காதல்.......

யாருமே இல்லாத
கடற்கரையில்...
கண்ணாடி கற்களை
கடல் அலைகள்
மோதுவது போல் தான்
என்னில் உன் நினைவலைகள்
நிறைந்திருக்கின்றன.........!

உன்
பெயரை
எனக்குள்ளாகவே

உச்சரித்து !
உச்சரித்து !!
என்னை
நானே
உயிர்பித்துகொள்கிறேன்...!!

எனக்கு
மறுபிறவியில் எல்லாம்
நம்பிக்கை இல்லை...!
அன்பே ..!
அதனால் என்னை
இப்பொழுதே
சிறை எடுத்துவிடு.....!!!

______ நிலாபாவை...



1 கருத்து:

Anitha சொன்னது…

வாவ்!!!!!!
ரொம்ப நல்லாயிருக்கு நிலா இந்த கவிதை, வரிகள் எல்லாமே சூப்பர்:))