வெள்ளி, 5 டிசம்பர், 2008

உன்னை நினைத்து ..!!


என்னவனே...!!

என் வாழ்வில்

எத்தனையோ பேரை

கடந்து வந்த

எனக்கு....

உன்னை கடக்க

மட்டும் ஏன்?

இத்தனை...

தவிப்புகள்..!

தடுமாற்றங்கள்..!!


உன்னை

கண்டுவிட்டால்...

எனக்கு

உலகமே புரிவதில்லை ..!

ஆனால் நீ....

எப்பொழுதும்போல்

எப்படி இருக்கிறாய் ...???


என்றாலும் ...

நீ

மற்றவர்களிடமிருந்து

வித்தியாசபடுவதற்கே...

"விருது" கொடுக்க

வேண்டும் போல்

தோன்றுகிறது ....!!


ஒரு வேலை

நான் மட்டும்

உன்னை

நினைத்து..!!

நினைத்து..!!

நிம்மதி இல்லாமல்

இருக்கின்றேனா..???

நீ - என்னை

நினைக்கவில்லையா ??


அன்பே..!!

உண்மையில்

உன் எண்ணம்

அப்படியானால் ....

தயவுசெய்து..!!

அதை

என்னைவிட்டு

தொலைதூரத்தில் சென்று..!

சப்தமிட்டு சொல்..!!

என் செவிகளின்

சாவிற்கு பிறகு .....!!!!

_____நிலாபாவை...

2 கருத்துகள்:

இடைவெளிகள் சொன்னது…

தொலைதூரத்தில் சென்று..!
சப்தமிட்டு சொல்..!!
என் செவிகளின்
சாவிற்கு பிறகு .....!!!!

நல்ல நயமான வரிகள்

ஒரு அழுத்தமான வலியின் பதிவுகள்
இந்த வரிகள்

பாராட்டுக்கள்

kalanidhi சொன்னது…

நன்றி என்னும் ஓர் வார்த்தையால் உன்னிடம் சொல்ல முடியாது
சில நினைவுகள் என்னுள்
திரும்பி பார்க்கிறேன்
கானல் நீர் போல்
விழிகளுக்கு தெரியும்
அது பொய் என்று
இருந்தும் என் வலிகள்...
நல்ல நயமான வரிகள்